உள்நாடுவிசேட செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு ஆப்பு – வருகிறது புதிய ‘புள்ளி’ விதிமுறை!

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு ‘குறைப்புப் புள்ளிகள்’ வழங்கும் முறையை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

கேகாலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

GovPay ஊடாக அபராதப் பணத்தைச் செலுத்தும் முறைமை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படுவதோடு, இந்தப் புள்ளி வழங்கும் முறைமையும் ஆரம்பிக்கப்படும் என அவர் விளக்கமளித்தார்.

மேலும், போதைப்பொருள் பாவித்துக் கொண்டு வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு எதிராக இந்த 2026 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 300 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் பாவனையைக் கண்டறிவதற்காகப் பொலிஸ் மா அதிபரால் புதிய பரிசோதனை உபகரணமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், அது நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிப்பாகங்களை அகற்றாது வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர வலியுறுத்தினார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்பாளர்களுக்கான விசேட அறிவித்தல்

editor

“உயிர்த்தஞாயிறு தாக்குதலை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்”சந்திரிகா

உள்ளூராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடல் – பிரசன்ன ரணதுங்க