உள்நாடு

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக விசேட புகையிரத சேவைகள்

தைப்பொங்கலுடன் இணைந்த வார இறுதி விடுமுறையை கருத்திற் கொண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென புகையித சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இன்றும், எதிர்வரும் 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31 ஆம் திகதிகளிலும் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெப்ரவரி மாதம் 02 ஆம் மற்றும் 04 ஆம் திகதிகளில் இரவு 7.30க்கு கொழும்பு கோட்டையிலிருந்து விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தநிலையில், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31 ஆம் திகதிகளில் இரவு 7.40க்கு சேவையை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கெஹெலியவின் வாயடைக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – விவாத திகதி அடுத்தவாரம்

பிள்ளையானின் ரி.எம்.வி.பி கட்சியின் பதில் தலைவர் உட்பட மூவரிடம் சி.ஐ.டி விசாரணை

editor