உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் இருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு)- கொழும்பு நகர போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் 02 பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மருதானை – டார்லி வீதியில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரமின்றி வீதியில் பயணித்த நால்வருக்கு குறித்த இரண்டு பொலிஸாரும் தண்டனை வழங்கியுள்ளனர்.

தோப்புக்கரணம் போடுமாறு பொலிஸார் இருவரும் குறித்த நால்வருக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த சூழ்ச்சி – மஹிந்த ராஜபக்ஷ

editor

ஹமாஸ் இயக்கத் தலைவரின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்.

கோப் குழு செவ்வாயன்று கூடுகின்றது