உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளைப்போல் மாறுவேடத்தில் சென்று கொள்ளை

(UTV | கேகாலை) –  பொலிஸ் அதிகாரிகளைப்போல் மாறுவேடத்தில் சென்று கொள்ளை

நேற்றயதினம் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டினுள் நுழைந்த 03 சந்தேக நபர்கள் அவர்களை மிரட்டி தாக்கி அங்கிருந்த தங்கப் பொருட்கள் மற்றும் பிற சொத்துக்களை கொள்ளையடித்துள்ளனர்.

நேற்று காலை குறித்த வீட்டின் உரிமையாளர் தனது நண்பர்கள் மூவருடன் தற்காலிகமாக கட்டப்பட்ட வீட்டில் தங்கியிருந்த போதே சந்தேகநபர்கள் பொலிஸார் என கூறி வீட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் குறித்த நபர்களை மண்டியிடச் செய்து அவர்களிடம் இருந்த தங்க வளையல், 02 தங்க மோதிரங்கள், 02 தங்க சங்கிலிகள், 02 பென்டன்ட்கள், 355,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி மற்றும் ஏனைய சொத்துக்களை பறித்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட சொத்தின் பெறுமதி 18 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மேலும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை – திகதியை அறிவித்தார் சபாநாயகர்

editor

முல்லைத்தீவு, மாங்குளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

editor

ரவி உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்ல தடை