உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர ஆலோசனை!

(UTV | கொழும்பு) –

பொலிஸ் அதிகாரிகள் சிவில் ஆடையில் கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் பரிசோதனை செய்வதற்காக வாகனங்களை நிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என தெரிவித்து , தான் புதிய ஆலோசனைகளை பெற்றுக்கொடுத்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபா் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளாா்.

அந்த ஆலோசனை பட்டியல் நேற்று  பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.

நேற்று முன்தினம்  நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவரினால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சாரதியொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த புதிய ஆலோசனைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டாா்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து.

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்

200 அடி பள்ளத்தில் விழுந்து கார் விபத்து – மூவர் படுகாயம்

editor