உள்நாடுபிராந்தியம்

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

இன்று (12) மாலை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், குறித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதுடன், அதன் செலுத்துனர் பின்னர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபரைப் பின்தொடர்ந்து வீட்டிற்குச் சென்றபோது, அவர் மன்னா கத்தியால் பொலிஸாரைத் தாக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபரின் கால் மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இதற்கு முன்னர் 7 போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகநபராக காணப்பட்டதுடன், தற்போது மேலும் இரண்டு குற்றவியல் வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டு வந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏனைய இருவரையும் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு அநீதி: களமிறங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகள்

17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை

editor

IDH வைத்தியசாலையில் மேலும் இருவர் தொடர்பில் விசேட பரிசோதனை