வகைப்படுத்தப்படாத

பொலிஸாரும் முப்படையினரும் பொறுப்புடன் செயற்பட்டனர்

(UTV|COLOMBO)-பொலிசாரும் முப்படையினரும் பொறுப்புடன் செயற்பட்டதனாலேயே சமீபத்திய ஹிந்தோட்டை சம்பவத்தை கட்டுப்படுத்த முடிந்ததென்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைவாக கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

காயம் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட 134 சம்பவங்கள் தொடர்பில் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

சொத்துக்கள் பாதிப்பு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுவருகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நீக்கப்படவில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படுவதை தடுப்பதற்காக பொலிஸ் சோதனை பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அமைதியை ஏற்படுத்துவதற்காக மதத்தலைவர்கள் புத்திஜுவிகளைக்கொண்ட குழுவொன்று அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொரிய நாட்டவர் கைது

3 வயது குழந்தைக்கு நாய் செய்த காரியம்

Rajasinghe Central and Azhar College win on first innings