உள்நாடுபிராந்தியம்

பொலித்தீன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முற்றாக தீயில் எரிந்து நாசம்

நவகமுவ – தெடிகமுவ ஜய மாவத்தை பகுதியில் உள்ள பொலித்தீன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (28) இரவு தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து சுமார் 03 மணிநேர போராட்டத்தின் பின்னர் தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும் பொலித்தீன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நவகமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

2024 இல் 5% பொருளாதார வளர்ச்சி

editor

எமது ஆட்சிக் காலத்தில் நாம் மக்களைக் கைவிடவில்லை – நாமல் ராஜபக்‌ஷ எம்.பி

editor