டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம், ஓனேகம மற்றும் புதூர் முஸ்லிம் கிராமங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று அவர்களின் சுக துக்கங்களைக் கேட்டறிந்தார்.
புதூர் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.
