உள்நாடுபிராந்தியம்

பொரளையில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 10 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டு தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

07.08.2025 அன்று பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்று மூவரைக் காயப்படுத்திய குற்றம் குறித்து ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது.

அதன்படி, நேற்று (12) மதியம் தமன பொலிஸ் பிரிவில் இந்தக் குற்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை அந்தப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்தேக நபர் அம்பாறை, தமன பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் முன்னர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், 2015 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ரவியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் உடன்படுவதாக பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

editor

IMF உடன் செய்துள்ள ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது – ஜனாதிபதி ரணில்

editor

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒத்துழைப்பு

editor