உலகம்

பொய் சொல்லி நூற்றுக்கணக்கான முறை இலவசமாக விமான பயணம் சென்றவர் கைது

கனடாவைச் சேர்ந்த ஓர் ஆடவர் விமானி, விமானச் சிப்பந்தி போன்று ஆள்மாறாட்டம் செய்து நூற்றுக்கணக்கான முறை இலவசமாக விமானத்தில் பயணம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயது டால்லாஸ் பொகோர்னிக் என்ற அந்த ஆடவர் கனடாவின் டொரோண்டோ நகரில் வைத்தே கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணைக்காக அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பொகோர்னிக் டொரோண்டோவில் ஒரு விமான நிறுவனத்தில் விமானச் சிப்பந்தியாகப் பணியாற்றினார்.

பின்னர் அவர் பொய்யான ஊழியர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி 3 விமான நிறுவனங்களில் விமானிகளுக்கும் விமானச் சிப்பந்திகளுக்கும் ஒதுக்கி வைக்கப்படும் விமானச் சீட்டுகளைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

அவ்வாறு 4 ஆண்டுகளுக்கு பொகோர்னிக் ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் எந்த விமானங்களில் இலவசமாகச் சென்றார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. எனினும் பொகோர்னிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 250,000 அபராதத்தை எதிர்கொள்வார் என்று அமெரிக்க நீதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கை மற்றும் மற்றைய நாடுகளில் அதிக வருமானம் ஈட்டும் யூடியூபர்கள்

பலி எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியது இத்தாலி

கொவிட் 19 தொடர்பிலான வதந்திகளை பதிவிட தடை