உள்நாடுபிராந்தியம்

பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது – ஒருவர் பலி

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்தாதல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும் மற்றுமொருவரும் பலத்த காயங்களுடன் திருக்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கே எ ஹமீட்

Related posts

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்

முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

வெள்ளத்தால் முல்லைத்தீவு மக்கள் அவதி!