உள்நாடு

பொதுமக்கள் தாம் விரும்பும் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தற்பொழுது தீவிரமடைந்து வருகின்ற நிலையில் ​தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்து ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை கருத்துத் தெரிவித்துள்ளார்.

“..இலங்கையில் இதுவரை அஸ்ட்ரா செனேகா, மற்றும் கொவிட் ஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டிலுள்ளன.

அத்துடன் தற்பொழுது சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளும் கிடைக்கப்​பெற்றுள்ள. ​மேலும் ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் -வி என்ற தடுப்பூசிகளும் விரைவில் வரவுள்ளன.

எவ்வாறு இருப்பினும் பொதுமக்கள் தாம் விரும்பும் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது ” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று மின்சார விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது

பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி

திசைகாட்டியின் மற்றுமொரு பொய்யை ஆதாரத்துடன் விளக்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor