அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வரும் நிலையில், அது தொடர்பான கலந்துரையாடல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவை உத்தியோகபூர்வமாக தொடர்பு கொள்ளவில்லை .

இருப்பினும், அது எப்போது நடக்கும் என்பதற்கான தீர்மானங்கள் ஏற்கனவே முன்னெடுக்கபட்டுள்ளன.

“பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், வேட்பாளர்கள் வேட்புமனுக்களை 7 முதல் 17 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஜனாதிபதியால் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related posts

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

editor

சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் இலங்கை தூதரகம் கோரிக்கை

டொலரின் பெறுமதி ரூ.275 ஆக உயர்வு