வகைப்படுத்தப்படாத

பொதுத் தேர்தலையும் பிற்போட அரசாங்கம் திட்டம் – தினேஸ் குணவர்தன

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் ஊடாக உள்ளுராட்சிமன்ற தேர்தல் மட்டுமல்லாது பொதுத் தேர்தல்களையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் பல்வேறு கற்பனை கதைகளை கூறி ஆட்சியை கைப்பற்றியது.

அவர்கள் கூறியதை போன்று எதனையும் செய்ய முடியாமல் போயுள்ளது.

நாட்டின் சுகாதாரம் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் தாம் வாக்களித்து ஆணை வழங்கிய அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்பார்துள்ளனர்.

எனினும், தேர்தல் ஒன்றை நடத்தாமல் காலம் தாழ்த்தும் முயற்சியையே அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.

Related posts

ஹெரோயினுடன் இளைஞர் கைது

படகு கவிழ்ந்த விபத்தில் 100 பேர் பலி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றுள்ளார்