உள்நாடு

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – சேவைக்கு சமுகமளிக்காத முப்படையினரை சட்ட ரீதியாக விலக்குவதற்காக அல்லது சேவையில் மீண்டும் இணைவதற்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் இன்றுடன்(12) நிறைவடைகின்றது.

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கான அதிகாரங்களுக்கு அமைய, கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதி பொதுமன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, பொது மன்னிப்பு காலப்பகுதியில் முப்படையை சேர்ந்த 6259 பேரும் உயர் அதிகாரிகள் 13 பேரும் சேவைக்கு சமூகமளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் சட்டங்களை மீறிய 16 வேட்பாளர்கள் கைது

editor

2026 முதல் பாடசாலை கல்வி தவணைகள் முறையாக நடைபெறும் – பிரதமர் ஹரினி அமரசூரிய

editor

INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி நவம்பர் – BMICH இல்.