உள்நாடு

பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை

(UTV | கொழும்பு)- சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள 444 பேர் வரையிலான சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பெயர்ப் பட்டியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, விடுதலை செய்யப்படுகின்றவர்களுள் 18 பெண் கைதிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிறு குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறையில் கழித்த ஒரு வருடம் அல்லது அதன் ஒரு பகுதிக்கு தலா 3 மாதம் வீதம் அரச மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை

கிளிநொச்சியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

editor

சர்வதேச அபிவிருத்திக்கான பிரதானி சமந்தா பவரை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்தார்.