உள்நாடுசூடான செய்திகள் 1

பொடி லெசியின் தாயாரின் பிறந்த நாளுக்காக 2.5 மில்லியன் செலவில் விருந்துபசாரம்

(UTV | கொழும்பு) –

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான பொடி லெசி எனப்படும் ஜனித் மதுஷங்கவின் தாயாரின் பிறந்த நாளுக்காக 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டு விருந்துபசாரம் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அம்பலங்கொடை பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இந்த விருந்துபசாரம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பொடி லெசியின் தாயாருக்கு பிறந்த நாள் பரிசாக 15 பவுண் தங்க சங்கிலி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையில் இருந்து பொடி லெசி வெளியிட்ட செய்தி ஒன்றையும் தொலைபேசி ஊடாக செவிமடுக்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து – நால்வர் காயம்

editor

இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும்- பிலிப்பைன்ஸ் நிதியமைச்சர்.

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் VVIP வசதி இரத்து – சபாநாயகர்