சூடான செய்திகள் 1

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

(UTVNEWS|COLOMBO) – பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் – மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சகல இனத்தவரும் ஒரே கூரையின் கீழ் கல்விகற்கும் பின்புலம் உருவாக்கப்படவேண்டும்

பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் ஐக்கிய தேசிய கட்சி அமரும்

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு