வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் பதிவால் மரண தண்டனை..

(UDHAYAM, COLOMBO) – பேஸ்புக் பதிவுகள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

தாய்மூர் ராசா என்று 30 வயதான ஒருவருக்கு பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தினால் கடந்த தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் குறித்த இழிவான பதிவுகளை தொடர்ச்சியாக அவர் பதிவிட்டு வந்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த விடயத்துக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வன்முறை அல்லாமல், தமது சொந்தக் கருத்துக்களை பதிவு செய்யும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.

ஆனால் இந்த விடயத்தை தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டமை முறையற்றது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை

EU Counter-Terrorism Coordinator here

இன்ஃபுலுவன்சா பி வைரஸ் மீண்டும் பரவுகிறது- எச்சரிக்கின்றது அரசாங்கம்