கிசு கிசு

பேஸ்புக் நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளா?

(UTV|NEW ZEALAND) பேஸ்புக் நிறுவனம் நியூசிலாந்து – கிறிஸ்ட்சேர்ச் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அதன் நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் 1 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாதிகள் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக வெளியிட்டனர்.

இணையத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்பான நேரலைகளைக் கட்டுப்படுத்துமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

பேஸ்புக் பக்கத்தில் ஒருமுறை விதிமீறலில் ஈடுபடுவோருக்கு நேரலை செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமீறலின் தன்மைக்கு ஏற்றவாறு தடையின் காலம் நீடிக்கப்படலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

Related posts

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…

நாமல் ராஜபக்ஷ மீண்டும் களத்தில்..

“ஊழலற்ற மக்கள் ஆட்சி வரும் வரையில் ஒரு டொலரேனும் அனுப்ப மாட்டோம்”