உள்நாடு

பேரூந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகள்

(UTV | கொழும்பு) – பேரூந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் உள்வாங்கப்படுகின்றார்களா என்பதை கண்டறிவதற்கு இன்று(24) முதல் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பேரூந்து மற்றும் ரயில்களில், ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இராஜாங்க அமைச்சர் இதனை இன்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விதிமுறைகளை மீறி பயணிக்கும் பேரூந்து சேவைகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாட்டினை பதிவு செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் இவ்வாறு அடையாளங் காணப்படுவோர் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்கு இன்றும் 1,180 பேர் அடையாளம்

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

ரஞ்சன் ராமநாயக்க கைது [VIDEO]