ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து மஹல்வெவ சென்ற தனியார் பேருந்தும் ஹம்பாந்தோட்டையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த 15க்கும் அதிகமானோர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூன்று பேரின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளதாக கூறப்படுகின்றது.
