வகைப்படுத்தப்படாத

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

(UTV|ZIMBABWE)-சிம்பாப்வே நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ඇවන්ගාඩ් සභාපති ඇතුළු 08 දෙනා අත්අඩංගුවට ගන්නැයි නීතිපතිගෙන් දැනුම්දීමක්.

மகப்பேற்று வைத்தியசாலையில் தீ – 8 குழந்தைகள் உயிரிழப்பு

நியூசிலாந்து தாக்குததாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்..!தாயிடமிருந்து வேண்டுகோள்…