சூடான செய்திகள் 1

பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

(UTV|COLOMBO)-அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.

இது தொடர்பான மனு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

அர்ஜுன ரணதுங்க தாக்குதல் நடத்தியதாக முறைப்பாட்டாளர் கூறியுள்ள போதும் அது தொடர்பான காட்சிகள் எதுவும் சிசிடிவி கெமராவில் பதிவாகியில்லை என்று கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சாட்சி இல்லை என்றால் இந்த சந்தேகநபரை கைது செய்தது ஏன் என்று பொலிஸாரிடம் வினவிய நீதவான், அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக போதுமான சாட்சிகள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் அடுத்த தவணையின் போது நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து வழக்கை எதிர்வரும் 01ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

SLIDA பசுமை வாரம் கண்காட்சி ஆரம்பம்

தகவல் வாரம் இன்று முதல்…

இலங்கை மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானம்!