விளையாட்டு

பெர்லின் மரத்தன் போட்டி ஒத்திவைப்பு

(UTV | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு ஜேர்மன் அரசாங்கத்தின் அறிவிப்பை தொடர்ந்து பெர்லின் மரத்தன் (Berlin Marathon) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ஏப்ரல் 2020 அன்று நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் ஒக்டோபர் 24 ஆம் திகதிக்குள் 5000 க்கும் மேற்பட்ட கூட்டங்களைக் கொண்ட எந்தவொரு போட்டிகளையும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது எங்கள் பல போட்டிகளுக்கு பொருந்தும், இதன் காரணமாக செப்டம்பர் 26-27 திகதிகளில் பெர்லின் மரத்தனை ஏற்பாடு செய்ய முடியாது என்று அமைப்பாளர்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளனர்.

போட்டியாளர்களின் புதிய திக திகளை அமைப்பாளர்கள் அறிவிக்கவில்லை என்றாலும், நிலைமை இயல்பானதாக இருக்கும் வரை எந்த பெரிய விளையாட்டு நிகழ்வையும் ஏற்பாடு செய்ய முடியாது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் ஜெர்மனியிலும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நாட்டில், கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 5,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணி தெரிவு!

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

FIFA 2018 – மெக்சிகோவின் தடையை தகர்க்கும் முனைப்பில் பிரேசில்