சூடான செய்திகள் 1

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும்…

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடரவுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பின் காரணமாக வேதன உயர்வு விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எஸ். அருள்சாமி தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், நிலையான அரசாங்கம் ஒன்று தற்போது நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இதனை தெரிவித்தனர்.

 

 

 

 

Related posts

நிலத்தடி நீர் கலந்துள்ளதன் காரணமாக குடிநீர் பிரச்சினை…

விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான தீர்மானம்

சுழிபுரம் சிறுமியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்