உள்நாடு

பெருக்கெடுத்த களனி கங்கை – கடுவலை அதிவேக இடமாறல் நிலையத்தில் போக்குவரத்து முற்றாக நிறுத்தம்

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகக் களனி கங்கை பெருக்கெடுத்திருப்பதால், கடுவலையில் அதிவேக நெடுஞ்சாலைக்கான இடமாறல் நிலையத்தில் வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள நிலைமை காரணமாகக் கடவத்தை திசையிலிருந்து அதிவேக வீதிக்குள் நுழையும் வாகனங்கள் கடுவலை வெளியேறும் வாயிலைப் பயன்படுத்துவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடுவலை திசையிலிருந்து வரும் வாகனங்கள் கடவத்தை திசை நோக்கி அதிவேக வீதிக்குள் நுழைவதும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சுமந்திரனுக்கு கிடைத்துள்ள புதிய பதவி!

உரிமம் இன்றி யானை வைத்திருந்த சம்பவம் – அலி ரொஷானின் பிணைக் கோரிக்கையை விசாரிக்க நீதிமன்றம் முடிவு

editor

பௌத்த சமயம் உலகவாழ் மக்களுக்கு சொந்தமானது