உள்நாடு

பெரிய வெங்காயத்திற்கான விசேட பொருட்கள் வரியை குறைக்க நடவடிக்கை

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்துக்கான விசேட பொருட்கள் வரியை குறைக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, பெரிய வெங்காயத்துக்கான விசேட வரியை 30 ரூபாயில் இருந்து 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பொருட்கள் வரியை மாற்றியமைக்காமல், தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விசேட பொருட்கள் வரி 60 ரூபாயாக காணப்படுகிறது.

இந்த வரி திருத்தங்கள் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கவும் நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதி செய்யவும் குறுகிய கால நடவடிக்கையாக இதனை அமுல்படுத்த நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, இந்த வரி குறைப்பு டிசம்பர் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் எதிர்காலத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் உரிய சட்ட விதிகளின் கீழ் அதை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு

editor

ரோயல் பார்க் கொலை வழக்கு – இழப்பீட்டை செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor

போலிச் செய்திகளைப் பற்றி பயனர்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்கும் YouTube