உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத் திட்டத்தின் (LDSP) கீழ் உலக வங்கியின் 65 மில்லியன் ரூபா நிதியில் கல்முனை மாநகர சபையினால் மருதமுனை, பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள மாநகர கலாசார மண்டபத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (09) கோலாகலமாக நடைபெற்றது.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு, இதனைத் திறந்து வைத்தார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஜே. லியாகத் அலி, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாசிர் அஹ்சன் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஷட்.ஏ.எம். பைஷல், கிழக்கு மாகாண சபையின் கணக்காளர் முஹம்மட் சாலின், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், ஓய்வுபெற்ற நீதிபதி ரீ.எல்.எம். மனாப், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர் முஹம்மட் றினாஸ் உட்பட கல்முனை மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
-அஸ்லம் எஸ்.மெளலானா
