உள்நாடு

பெய்து வரும் கடும் மழை காரணமாக கிழக்கில் மேலும் பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயா பிரதேச செயலகப் பிரிவுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோரளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் உட்பட்ட முந்தேணி ஆறு குளத்தைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (25) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், வெள்ள அபாயம் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

editor

ஜனாதிபதியை அவசரமாக சந்தித்த ஹரீஸ் – நடந்தது என்ன ?

திங்கள் தீர்வு வழங்கினால் நாம் போராட்டத்தினை கைவிடத் தயார்