உள்நாடு

பெந்தர பழைய பாலம் முழுமையாக இடிந்து விழுந்தது

மூடப்பட்டிருந்த பெந்தர பழைய பாலம் நேற்று (26) இரவு முழுமையாக இடிந்து விழுந்துள்ளது.

1902 ஆம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம், காலி வீதியில் மேல் மாகாணத்தையும் தென் மாகாணத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய இடமாகும்.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தப் பாலம் பழுதடைந்திருந்த காரணத்தினால், புதிய பாலம் ஒன்றைக் கட்டிய பின்னர் பழைய பாலத்தை மூடுவதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தப் பழைய பாலம், அண்மைக்காலமாகப் பல சுற்றுலாப் பயணிகளும் புகைப்படக் கலைஞர்களும் புகைப்படம் எடுப்பதற்காகப் பயன்படுத்தி வந்த ஒரு இடமாகும்.

Related posts

பெருந்தோட்ட சமூகத்திற்கு புதிய வீடுகள் வழங்கும் வேலைத்திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்

editor

திசைகாட்டியால் பரிந்துரைக்கப்படும் சபாநாயகர் மீதும் நம்பிக்கை இல்லை – எதிர்க்கட்சியிலிருந்து பெயரினை முன்மொழிய உள்ளோம் – நளின் பண்டார எம்.பி

editor

 இளநீர் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம்