வகைப்படுத்தப்படாத

பெந்தர கடற்பகுதியில் கப்பல் ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை

(UDHAYAM, COLOMBO) – பெந்தர கடற்பகுதியில் கப்பல் ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடற்கடையின் கடமைநேர ஊடக பேச்சாளர் கொமாண்டர் ருவான் பிரேமவீர இதனை தெரிவித்துள்ளார்.

சிங்கபூருக்கு சொத்தமான கப்பல் ஒன்று அதன் அனைத்து மின்விளக்குகளையும் ஒளிரச் செய்ததனால் இவ்வாறான ஒரு காட்சி தென்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதும் குறித்த கப்பல் பயணித்த கடற்பகுதிக்குச் சென்று ஆராய்ந்ததாகவும் கடமைநேர ஊடக பேச்சாளர் கொமாண்டர் ருவான் பிரேமவீர குறிப்பிட்டார்.

Related posts

India building collapse: Dozens trapped in south Mumbai

இன்று காலை 9 மணிமுதல் 12 மணிநேர நீர்வெட்டு!!

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்