உள்நாடு

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்

பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானி செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேஷிய பொலிஸாரால் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு வந்த பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேகநபரை கொழும்பு தலைமை நீதவான் முன்பு ஆஜர்படுத்தியிருந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை இரு மொழிகளிலும் பாராளுமன்றுக்கு

அரச அலுவலகங்களில் வேலைவாய்ப்பு இல்லை – திறைசேரி அறிவிப்பு!

முன்னாள் எம்.பி நிதியமைச்சின் செயலாளராக நியமனம்

editor