உலகம்

பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல் – WHO

(UTV | கொழும்பு) – கொவிட் வைரஸுக்கு பூஸ்டர் தடுப்பூசி என்பது ஒரு ஊழல் என்றும், அதனை உலக நாடுகள் தடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

வளர்ந்த நாடுகளில் கையாளப்படும் கொவிட் தடுப்பூசியின் நிலவரம் குறித்தும் உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கருத்து வெளியிடுகையில்;

வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் போடப்படும் முதல் டோஸ் தடுப்பூசியை காட்டிலும், வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6 மடங்கு அதிக அளவில் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும், ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசிக்கூட செலுத்தப்படாமல் உள்ள நிலையில், வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆரோக்கியமான நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு!

முதியோர் இல்லத்தில் புகுந்து துப்பாக்கி சூடு – 6 பேர் பலி

காசாவில் மருத்துவ பணியாளர்கள் சுட்டுக்கொலை – ஏற்றுக்கொண்டது இஸ்ரேல்

editor