கிசு கிசு

பூஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறை?

(UTV|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்நிலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக இன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Brandix இனைத் தொடர்ந்து மேலும் இரு உள்நாட்டு தொழிற்சாலைகளில் கொரோனா

அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்தவுக்கு வழங்கப்பட வேண்டும்

குக் இனது கனவு அணியில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள் இவர்களா?