உள்நாடு

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பற்றாக்குறை காரணமாக புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளில் அதிகளவான நோயாளிகள் இக்கட்டான நிலையில் உள்ளனர் என்று அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பீ.திலகரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இதுவரை 15 மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்காததால், நோயாளிகள் அதிக விலை கொடுத்து தனியார் மருந்தகங்களில் அவற்றை வாங்க வேண்டியுள்ளது.

அரச மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மருந்துகளின் விலையை அவ்வப்போது உயர்த்துவதால், மருந்துகளின் விலை கிட்டத்தட்ட 300 வீதத்தினால் அதிகரித்துள்ளன.

இதன்படி, புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு குப்பியின் போன்ற மருந்துகளின் விலை 300,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

அரச மருந்து சீட்டுகளுக்கு “ஒசுசல” இல் இலவச மருந்து

ஐ.நா. சபைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவி ஜயந்த ஜயசூரியவிற்கு

editor

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு