அரசியல்உள்நாடு

புத்தளம் புளிச்சாக்குளத்தில் ரிஷாட் எம்.பி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிகட்டு பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளரான எம்.எச்.முர்ஷித் அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலகத் திறப்பு விழாவும், முதலாவது மக்கள் சந்திப்பும் இன்று வெள்ளிக்கிழமை (11) புத்தளம் புளிச்சாக்குளத்தில் இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், ஆராச்சிகட்டுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மது நிஜாமுதீன், ஆராச்சிகட்டுவ பிரதேச சபைக்கு போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சுபா  மற்றும் தொழிலதிபர் முஹம்மது இர்ஷாத் உட்பட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள், உலமாக்கள் என பலரும்  பங்கேற்றிருந்தனர்.

Related posts

ரதன தேரர் CID முன்னிலையில்

முஸ்லிம் சமூகம் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

editor

ஜனாதிபதி மின்துறை நிபுணர்களின் ஆதரவை கோருகிறார்