இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் கல்வி நிலையத்தின் பிரச்சினைகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக புத்தளம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கும் மேற்கொண்ட விஜயத்தின் போதே பிரதமர் புத்தளம் கல்வி நிலையத்தைப் பார்வையிட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது பழைய மருந்துக் களஞ்சியக் கட்டிடமொன்றில் இயங்கிவரும் புத்தளம் கல்வி நிலையத்திற்குப் பதிலாக, புதிய நிரந்தரக் கட்டிடமொன்றை அமைப்பது குறித்து பிரதமர் கலந்துரையாடினார்.
நிரந்தரக் கட்டிடம் அமையும் வரை நிர்வாக மற்றும் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான தற்காலிகக் கட்டடமொன்றைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
தற்காலிகத் தேவைக்காக நகர சபைக்குச் சொந்தமான கட்டிடமொன்றை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக புத்தளம் நகர முதல்வர் ரின்ஷாட் அஹமட் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.
