சூடான செய்திகள் 1

புத்தளம் – அறுவக்காடு வெடிப்புச் சம்பவம்- அறிக்கை சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO) – புத்தளம் – அறுவக்காடு குப்பை மேட்டில் உள்ள தாங்கி ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை இந்த வாரத்துக்குள் கிடைக்கப்பெற உள்ளதாக
அறுவக்காடு திட்டத்தின் குப்பை முகாமைத்துவ பிரிவின் அதிகாரி நிமல் ப்ரேமதிலக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி அறுவக்காடு குப்பை மேட்டில் ஏற்பட்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, அங்கு குப்பைகளைப் கொட்டுவதை தற்காலிகமாக இடைநிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் அரச இரசாயன பகுதிப்பாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, அறுவக்காடு குப்பை மேட்டில் நேற்று முதல் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக பரவும் செய்தி பொய்யானது

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்ரமரத்ன

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்