சூடான செய்திகள் 1

புதையல் தோண்டிய ஆறு பேர் கைது

(UTV|COLOMBO)-மஹியங்கனை – ஹபரவெவ – பதியதலாவ பகுதியில் உள்ள காணியொன்றில் புதையல் தேடும் நோக்கில் நிலத்தை தோண்டிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், மஹியங்கனை, கலன்பிந்துனுவெவ, இபலோகம, கல்கிரியாகம, கம்ஹா மற்றும் ஓபாத பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

32 முதல் 48 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

 

 

 

Related posts

எமது அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமையே கோட்டபாய வீடு செல்ல காரணம்

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் விஷேட அறிவிப்பு

அரசியலமைப்புச் சபை நாளை கூடவுள்ளது