இன்று (01) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4250 ரூபாவாகும்.
அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1710 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
