உள்நாடு

புதிய பதிவாளர் நாயகமாக முதன் முறையாக பெண் நியமனம்

புதிய பதிவாளர் நாயகமாக முதன்முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பதிவாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி சசிதேவி ஜல்தீபன், இன்று (26) தனது புதிய பதவியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பதிவாளர் நாயகத் துறையின் முதல் பெண் பதிவாளர் நாயகமாக அவர் வரலாறு படைத்துள்ளார் .

2003 ஆம் ஆண்டு பொது நிர்வாக சேவையில் இணைந்த திருமதி ஜல்தீபன், திருகோணமலை மற்றும் திம்புலாகல பிரதேச செயலாளராக பணியாற்றியுள்ளார்.

Related posts

மத்துகம-பொந்துபிட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில்

கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு!

வெப்பமான வானிலை காரணமாக மாணவர்கள் நோய்களுக்கு உள்ளாகும் நிலைமை அதிகரிப்பு