வகைப்படுத்தப்படாத

புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர் காணல் மார்ச் 13 முதல்

புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
மார்ச் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது .

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கிராம அலுவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,232 பேர் நேர்காணலில் பங்கேற்க உள்ளனர்.
நேர்முகத் தேர்வுகளின் பின்னர் வெற்றிடங்கள் மிக விரைவாக நிரப்பப்படும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குறிப்பிடுகின்றார்

Related posts

Sri Lanka likely to receive light rain today

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கைப்பேசியை வைத்து மாணவர்கள் செய்த காரியம்!!