வகைப்படுத்தப்படாத

புதிய இராணுவத்தளபதி உத்தியோகபூர்வமாக பதிவியேற்பு

(UDHAYAM, COLOMBO) – புதிய இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க 22வது இராணுவ தளபதியாக உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.

இராணுவ தலைமையக இராணுவ தளபதி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா புதிய இராணுவ தளபதியை வரவேற்றார்.

இந்த நிகழ்வின் போது இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள் , பணிப்பாளர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா 2015 பெப்ரவாரி மாதம் 22ம் திகதி 21வது இராணுவ தளபதியாக பதவியை கடமையேற்றார். அவரது பதவி காலங்களில் ஏற்பட்ட தேசிய தேவைகள் மற்றும் அனர்த்தம் மற்றும் மீட்பு பணிகளில் சிறந்த பங்களிப்பை மேற்கொண்டார்.

அத்துடன் கொஸ்கம ஆயுத கிடங்கு வெடிப்பு மற்றும் மீதொட்டமுல்லை குப்பைமேடு , மண்சரிவு, அனர்த்தங்கள், டெங்கு ஒழிப்பு, வீடு நிர்மானிப்பு பணிகள் , மீள்குடியேற்றம் மற்றும் பல்வேறுபட்ட சமயம் , நலன்புரி திட்டங்களுக்கும் தலைமை வகித்தார்.

ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா இராணுவத்திலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரியாவார். பல்வேறு மட்டங்களில் கட்டளை,பதவிநிலை மற்றும் ஆலோசகர் பதவிகளை வகித்தார். தற்பொழுது இவர் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியாக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

අලි රොෂාන් ඇතුළු 8ක් නඩුව අවසන් වනතුරු රක්ෂිත බන්ධනාගාරයට

Neymar rape case dropped over lack of evidence

மகிந்த ராஜபக்ஷவை மகிழ்ச்சியடைய வைத்துள்ள விடயம்!!