அரசியல்உள்நாடு

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய விண்ணப்பம் கோரல் – தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

2026 ஆம் ஆண்டிற்காக புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் நேற்று (28) முதல் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசியல் கட்சியின் செயலாளரினால் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும் அல்லது இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணையகத்தில் நேரடியாக ஒப்படைக்கலாம்.

விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் இடதுபக்க மேல் மூலையில் “அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் – 2026” என்று குறிப்பிடப்பட வேண்டும்.

விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என ஆணையாளர் நாயகம் ரசிக பிரீஸ் அறிவித்துள்ளார்:

  • கட்சியின் அமைப்பு யாப்பு.
  • தற்போதைய உத்தியோகபூர்வப் பதவியணிப் பட்டியல்.
  • கடந்த 4 ஆண்டுகளில் கட்சியில் இருந்த பெண் உத்தியோகத்தர்களின் பெயர்கள்.
  • கடந்த 4 ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகள்.
  • கட்சியின் கொள்கைப் பிரகடனம்.
  • அரசியல் கட்சியாகத் தொடர்ந்து 4 ஆண்டுகள் இயங்கியமைக்கான ஆதாரங்கள் (ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித்தனியாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).

விண்ணப்பப் படிவங்களை தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.election.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

குறித்த நேரத்திற்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது எனத் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கிரிக்கெட்டில் திறமையை நிலைநிறுத்த சகலதுறைகளிலும் ஒத்துழைப்பு தேவை – தனஞ்சய டி சில்வா

தற்போதைய அரசாங்கம் வாய்வீச்சு அரசாங்கமாகவே உள்ளது – பழனி திகாம்பரம் எம்.பி

editor

திங்கள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வழமைக்கு