வகைப்படுத்தப்படாத

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியலமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்.

புதிய அரசியலமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவது குறித்து சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். அவற்றில் எந்தவித உண்மையும் கிடையாது என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தாவது: புதிய அரசியலமைப்பு ஒன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவது 2015 ஆம்; ஆண்டு தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியாகும். 2015 ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலிலும் தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இதற்காக மக்கள் ஆணை கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

Related posts

UTV MEDIA WORKSHOP REGISTRATION – 2024

டொனால்ட் ட்ரம்பின் தொண்டு அமைப்புக்கு எதிராக வழக்குபதிவு

நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்வு