உள்நாடுபிராந்தியம்

புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வடிகாணில் வீசப்பட்ட நிலையில் மீட்பு

மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது.

சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இப்பலோகம பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார ஊழியரின் வீட்டில், முன் நாற்காலியில் வைக்கப்பட்ட நிலையில் ஒரு மாதம் வயதுடைய சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சிசு, நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறந்த உடல் ஆரோக்கியத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராணியின் இறுதிச் சடங்கில் இலங்கை ஜனாதிபதியும் கலந்து கொள்வார்

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் தாமதம்!