உள்நாடு

புகையிரத பயணச்சீட்டு கட்டணங்கள் தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) –  புகையிரத பயணச்சீட்டு கட்டணங்கள் தொடர்பில் புகையிரத தொழிற்சங்கங்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்குமாறு புகையிரத பொது முகாமையாளர் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தொழிற்சங்கம் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்கள் அவதியுறும் வேளையில் புகையிரதக் கட்டண உயர்வை மேற்கொள்ளக் கூடாது என்பதே அவர்களின் கருத்தாகும். ரயில் கட்டணத்தை அதிகரிக்காமல் மாற்று முறைகளின் மூலம் திணைக்களத்திற்கு ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியும் என நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – பந்துல குணவர்தன

editor

கண்டியிலும், மாவனெல்லயிலும்இடம்பெறும் ஆசிரியர்களுக்கானஇலவச பயிற்சி பட்டறை

editor

ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் – வெளியானது வர்த்தமானி அறிவிப்பு

editor