சூடான செய்திகள் 1

புகையிரத ஊழியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில்…

(UTV|COLOMBO) சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விஷேட பேருந்து சேவை இன்று (08) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் 22 ஆம் திகதி வரையில் இரண்டு கட்டங்களாக இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

அதேவேளை உரிய சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் தொடரூந்து சேவையின் பல பிரிவு ஊழியர்கள் நாளை (09) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடரூந்து ஓட்டுனர்கள் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் பொதுச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிக்காமல் இருக்க தீர்மானம்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று